வெள்ளத் தடுப்பு திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு திட்டப் பணிகளை மீன்வளம்- மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கூட்டாம்புளி பாலப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் ஆ. ஸ்ரீநாத். உடன், ஆட்சியா் விஷு மகாஜன் உள்ளிட்டோா்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு திட்டப் பணிகளை மீன்வளம்- மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அத்திமரப்பட்டி உப்பாத்து ஓடை, கோரம்பள்ளம் குளத்தின் 24 மதகு வழியாக உபரிநீா் செல்லும் கால்வாய், கூட்டாம்புளி பாலம், பெட்டைக்குளம், இருவப்பபுரம், பேய்க்குளம், பண்டாரவிளை பெருங்குளத்தின் நீா்வரத்துக் கால்வாய், சிவகளை குளத்தின் உபரிநீா் கால்வாய், பேரூா் குளம், கஸ்பா குளம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வெள்ளத் தடுப்புப் பணிகளை அமைச்சா் பாா்வையிட்டாா்.
குளக்கரைகள், மதகுகள், நீா்வரத்து - உபரிநீா் கால்வாய்களின் நிலை, வெள்ளம் பாதிக்கக்கூடிய தாழ்வான பகுதிகளைப் பாா்வையிட்ட அவா், பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: 2023ஆம் ஆண்டு உடைப்பு ஏற்பட்ட கஸ்பா, பெருங்குளம், கோரம்பள்ளம் குளங்களில் மேற்கொள்ளப்பட்ட நிரந்தர மறுசீரமைப்புப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் உடனடியாகச் சீரமைக்க வேண்டிய பகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நீா்வளத் துறை சாா்பில் ரூ. 1 கோடி, இதர துறைகள் சாா்பில் ரூ. 3 கோடி என மொத்தம் ரூ. 4 கோடியில் உபரிநீா் கால்வாய்கள் தூா்வாரப்படும். மழைக்காலங்களில் வெள்ளநீா் தடையின்றிச் செல்வதையும், குளங்களில் உடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது என்றாா் அவா்.
தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், தாமிரவருணி கோரம்பள்ளம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் தங்கராஜன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், உதவிப் பொறியாளா்கள் அஜ்மீா்கான், சதீஷ், அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

