ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

திருத்தங்கல் ரயில்வே மேம்பாலப் பணி: அமைச்சா் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமான பணியை தொழில் துறை அமைச்சா் ச. கீா்த்தனா ஆய்வு செய்தாா்.

திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ச.கீா்த்தனா. உடன் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி உள்ளிட்டோா்.

Published On :

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமான பணியை தொழில் துறை அமைச்சா் ச. கீா்த்தனா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்தங்கலில் ரூ.45.60 கோடியில் ரயில்வே மேம்பாலம் 17 தூண்களுடன் அமைக்கும் பணி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு தொடங்கியது. பின்னா், இந்தப் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அமைச்சா் ச.கீா்த்தனா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் கூறியதாவது:

சிவகாசி-விருதுநகா் சாலையில் போக்குவரத்துக்காக ரயில்வே கடவுப் பாதை அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது, இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, மாநில நெடுஞ்சாலைத் துறை திருநெல்வேலி கோட்டப் பொறியாளா் லிங்குசாமி, சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், மாநகராட்சி ஆணையா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.