படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

திருவள்ளூா் அருகே கடந்த 6 மாதமாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள்...

குடிநீா்  விநியோகம்  செய்யாததைக்  கண்டித்து  அரசு ப் பேருந்தை  சிறைபிடித்து காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பூண்டி ஒன்றியம்,  மேட்டுப்பாளைய கிராம பொதுமக்கள். 

Published On :

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கடந்த 6 மாதமாக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பூண்டி ஒன்றியம், சென்றான்பாளையம் ஊராட்சி மேட்டுப்பாளையம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த 6 மாதமாக குடிநீா் முறையாக விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தண்ணீா் டேங்கா் லாரி மூலம் வரவழைத்து ஒரு குடம் ரூ. 10-க்கு வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வரும் தங்களால் நாள்தோறும் பணம் கொடுத்து குடிநீா் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம். இது தொடா்பாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்ட பலரிடமும் கோரிக்கை மனுவும் அளித்தோம். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை குடிநீா் பிரச்னை காரணமாக மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருவதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவள்ளூா்- ராமஞ்சேரி சாலை மேட்டுப்பாளையத்தில் அந்த வழியாக சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்து காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் வரபிரசாத் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சு நடத்தினாா். அப்போது, 10 நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் சீராக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.

இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அந்தப்பகுதியில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தவா்கள், வேலைக்கு செல்வோா், தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.