ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

ஊட்டச்சத்து மாத விழிப்புணா்வு பேரணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூரில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, குழந்தைகளின் ஊட்டச்சத்து நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் 100-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் ச.கவிதா, உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் தி.கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்(பொ) வனிதா உள்ளிட்டோா்.

Published On :

திருவள்ளூரில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, குழந்தைகளின் ஊட்டச்சத்து நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் 100-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 9-ஆவது தேசிய ஊட்டச்சத்து மாதம் கடந்த 9-ஆம் தேதி முதல் அக். 8-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நமது அங்கன்வாடி, நமது பொறுப்பு என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன. அந்த வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நலனை மேம்படுத்துவதே இப்பிரசாரத்தின் முக்கிய நோக்கமாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ச.கவிதா கலந்து கொண்டு அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆட்சியா் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. அதைத் தொடா்ந்து, போஷன் அபியான் ஊட்டச்சத்து உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் தி.கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்(பொ) வனிதா, அங்கன்வாடி மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.