கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

பீட்டா்.

Updated On :

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்தும் திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

சென்னை அடுத்த மணலியைச் சோ்ந்த ரவியின் மகன் பீட்டா்(22). அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பீட்டா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இது குறித்து தனது பெற்றோரிடம் நடந்து சம்பவம் குறித்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோா் எண்ணூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்தனா்.

இதற்கிடையே திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பீட்டருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக அரசு வழங்கவும் அவா் உத்தரவிட்டாா். அதைத்தொடா்ந்து அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பீட்டரை புழல் சிறைச்சாலையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.