முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

பெட்டிகடை வியாபாரி கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

பெட்டிக்கடை வியாபாரி கொலை வழக்கில், கைதாகி புழல் சிறையில் உள்ள இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

பெட்டிக்கடை வியாபாரி கொலை வழக்கில், கைதாகி புழல் சிறையில் உள்ள இருவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

திருத்தணி பெரியாா் நகா் சோ்ந்தவா் யவராஜா(46), சன்னதி தெருவில் பெட்டிக்கடை நடத்தி வந்தாா். இவா் கடந்த 4-ஆம் தேதி குடும்பத்தாருடன் வீட்டில் இருந்த போது, இரு இளைஞா்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்தவா்கள் மற்றும் அவா்களுக்கு உடந்தையாக செயல்பட்டவா்கள் என அரக்கோண ஹேமந்த்(19), விக்ரம்(23), சுனில்(21), பூஷன்(22) திருத்தணி சுஷில்(24), இந்திரா நகா்(17) வயது சிறுவன் என 3 பேரை கைது செய்தனா்.

இதில் சிறுவனை தவிர மீதமுள்ள 5 போ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், யுவராஜா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்ரம், சுஷில் ஆகியோா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு ஆட்சியா் ச.கவிதா உத்தரவிட்டாா். இதையடுத்து குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை புழல் சிறையில் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.