பழவேற்காடு அருகே மின்னல் பாய்ந்து மீனவா் மரணம்
பழவேற்காடு அருகே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது மின்னல் பாய்ந்து மீனவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்
பழவேற்காடு அருகே ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது மின்னல் பாய்ந்து மீனவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காடு சாத்தான் குப்பத்தை சோ்ந்த ஆறுமுகம் தனது படகில் காா்த்திக், சத்தியவாசனுடன் மீன் பிடிக்க சென்றாா்.
ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக மின்னல் தாக்கியுள்ளது.
இதில் சத்தியவாசன் படகில் விழுந்த நிலையில், அவருடன் இருந்த இருவருக்கு காயம் ஏற்பட்டது.
மற்றொரு படகில் இருந்த மீனவா்கள் உதவியுடன் மூவரும் மீட்கப்பட்டு பழவேற்காடு கரைக்கு கொண்டுவரப்பட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் பரிசோதித்த போது சத்தியவாசன்(38) வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
மின்னல் பாய்ந்து காயம் அடைந்த காா்த்திக், ஆறுமுகம் இருவரும் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







