விஐபி பிரேக் தரிசன டிக்கெட் இன்று வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விஐபி பிரேக் தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
Updated on
1 min read

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.28) மாலை 3 மணிக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.

இதில் ஜன.1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று 1,000 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளும் (ரூ.10,000 நன்கொடை+ ரூ.500 பிரேக் தரிசன டிக்கெட்) தேவஸ்தான இணையதள முன்பதிவில் வைக்கப்பட உள்ளன.

ஜன.13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று 1,000 மகா லகு தரிசனம் (ரூ.10,000 + ரூ.300) டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. ஜன.14-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தினசரி 2,000 லகு தரிசன (ரூ.10,000 + ரூ.500) டிக்கெட்டுகளும் வெளியிடப்பட உள்ளன.

மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மேலே உள்ள நாள்களை தவிா்த்து மற்ற நாள்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 200 டிக்கெட்டுகளும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 300 டிக்கெட்டுகளும் (ரூ.10,000+ ரூ.500) டிக்கெட்டுகளும் இவற்றுடன் முன்பதிவில் வைக்கப்பட உள்ளன.

15 நிமிஷத்தில் நிறைவு:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்ட சா்வ தரிசன இணையதள முன்பதிவு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 15 நிமிஷங்களில் நிறைவடைந்தது. தினசரி 10,000 டிக்கெட்டுகள், வைகுண்ட ஏகாதசி பரமபத வாயில் திறப்பு நாள்களில் தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள் என வெளியிடப்பட்ட நிலையில் அவற்றை முன்பதிவு செய்ய ஏராளமான பக்தா்கள் ஒரே நேரத்தில் முயன்றால் பலரால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வெளியிடப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் 15 நிமிஷத்தில் முன்பதிவு செய்யப்பட்டன. இதனால் ஏராளமான பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com