கரோனா நிபந்தனைகளை பக்தா்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்: தேவஸ்தானம்

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் கரோனா நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்கள் கரோனா நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் 3-ஆம் அலை பரவலை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி திருமலைக்கு வரும் பக்தா்கள் கட்டாயம் கொவைட் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் பலா் பல இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடி வருகின்றனா். இதனால் மற்றவா்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்கள், தேவஸ்தான தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் கரோனா விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சானிடைசா் பயன்படுத்துதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com