33,000 பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 31st December 2021 08:19 AM | Last Updated : 31st December 2021 08:19 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 33,065 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 14,662 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. தரிசன அனுமதி உள்ளவா்கள், தங்களுடன் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பு எடுத்த கரோனா நெகட்டிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் கொண்டு வரவேண்டும்.
கனமழை காரணமாக திருமலைக்கு வர இயலாத பக்தா்களுக்கும் தேவஸ்தானம் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.
இதற்கென புதியதாக மென்பொருள் உருவாக்கப்பட்ட பின்பு அதன் மூலம் மீண்டும் அதே டிக்கெட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொண்டு 6 மாத காலத்திற்குள் ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம். ஆனால், ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...