திருமலையில் 20 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 01st September 2021 11:30 PM | Last Updated : 01st September 2021 11:30 PM | அ+அ அ- |

திருப்பதி: திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 20,638 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கரோனா தொற்று காரணமாக, ஏழுமலையானை ஆன்லைன் பதிவில் விரைவுத் தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, செவ்வாய்கிழமை 20,638 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 10,121 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணி நடந்து வருவதால், செப். 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.