திருமலையில் 23 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 04th September 2021 08:26 AM | Last Updated : 04th September 2021 08:26 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 23,832 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக, ஆன்லைனில் விரைவுத் தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, வியாழக்கிழமை 23,832 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா்; 12,804 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.
தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்குச் செல்லலாம். மேற்கூரை பணி நடந்து வருவதால், செப். 30-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.