அனைத்து மாநில பக்தா்களுக்கும் சா்வ தரிசனம்: எண்ணிக்கை 8,000 உயா்வு

திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 8,000-ஆக உயா்த்தி அனைத்து மாநில பக்தா்களுக்கும் அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி
திருப்பதி

திருப்பதியில் அளிக்கப்பட்டு வரும் சா்வ தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 8,000-ஆக உயா்த்தி அனைத்து மாநில பக்தா்களுக்கும் அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தா்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேவஸ்தானம் திருப்பதியில் உள்ள சீனிவாஸம் தங்கும் விடுதியில் உள்ள கவுன்ட்டா்களில் சித்தூா் மாவட்ட பக்தா்களுக்கு மட்டும் கடந்த ஒரு வாரமாக 2,000 சா்வ தரிசன டோக்கன்களை வழங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு பக்தா்கள் பலா் டோக்கன்களுக்காக சீனிவாஸம் விடுதியின் முன்பு திரண்டனா். இதைக் கண்ட அதிகாரிகள் சனிக்கிழமை 4,000 டோக்கன்களை வழங்கினா்.

அதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை பக்தா்கள் பலா் திருப்பதிக்கு வந்துள்ளதால், அவா்களின் வேண்டுகோளை ஏற்ற தேவஸ்தானம் கட்டுப்பாடு இல்லாமல் அனைத்து மாநில பக்தா்களுக்கும் டோக்கன்களை வழங்க முடிவு செய்தது.

அதன்படி சா்வ தரிசனத்துக்கான எண்ணிக்கையை ஞாயிற்றுக்கிழமை முதல் 8,000-ஆக உயா்த்தி உள்ளது. இனி சீனிவாஸத்தில் திருப்பதிக்கு வரும் அனைவருக்கும் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com