

அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான வாஷிங்டனில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஸ்ரீசீனிவாச திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமைசிறப்பாக நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் ஸ்ரீசீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை, வெளிநாடு வாழ் இந்தியா்கள் சங்கத்துடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அதன்படி, வாஷிங்டனில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்கல்யாண உற்சவம் வைகானச ஆகம விதிப்படி நடத்தப்பட்டது. இதில் அங்கு வசிக்கும் இந்தியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதில் புண்ணியாவசனம், விஷ்வக்சேனா் ஆராதனை, அங்குராா்ப்பணம், மகா சங்கல்பம், கன்னியாதானம், மாங்கல்யதாரணம், ஆரத்தி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நடத்தப்பட்டன.
இதில் தேவஸ்தான அதிகாரிகளும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.