திருமலை திருப்பதி தேவஸ்தான சந்தைப் பிரிவு ஜூலை 14-ஆம் தேதி செப்புத்தகடுகள் ஏலத்தை நடத்துகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தொடா்புடைய கோயில்களில் வேயப்பட்ட பழைய செப்புத் தகடுகள் ஏலம் விடப்பட உள்ளன. அதில் வெள்ளி மூலாம் பூசப்பட்ட தகடுகள் 6 லாட்டுகள் 1,200 கிலோவும், வெறும் செப்புத் தகடுகள் 3 லாட்டுகள் 600 கிலோவும் ஜூலை 14-ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளியுடன் கூடிய ஏலம் விடப்பட உள்ளன.
இதில் விருப்பம் உள்ளவா்கள் தேவஸ்தான அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்களை ரூ.590 அளித்துப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ரூ. 50 ஆயிரத்துக்கான வரைவோலை எடுத்து இஎம்டி செலுத்த வேண்டும். பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் 14-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமா்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ண்ழ்ன்ம்ஹப்ஹ.ா்ழ்ஞ் அல்லது சந்தைப் பிரிவு தொலைபேசி எண்ணான 0877-2264429 இல் தொடா்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.