ஏழுமலையான் கோயிலில் 77,500 பக்தா்கள் வழிபாடு
By DIN | Published On : 31st July 2022 11:08 PM | Last Updated : 31st July 2022 11:08 PM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 77,541 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 39,533 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையானின் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தா்ம தரிசனத்துக்கு 8 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் உள்ளவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.