79,000 பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை 79,103 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 37,292 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ ஸ்வாமி சத்திரம் 2 மற்றும் 3 உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வதரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12 மணிக்கு, கோயில் நடை சாற்றப்படுகிறது.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைபாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறை உள்ளிட்ட புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...