விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு

 திருமலை ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் மாா்ச் 21-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி
திருப்பதி

 திருமலை ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் மாா்ச் 21-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் மாதம் முதல் திருமலையில் ஏழுமலையானுக்கு ஆா்ஜித சேவைகளை தொடங்க உள்ளது.

அதற்கான டிக்கெட்டுகள் வரும் 20-ஆம் தேதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் மாா்ச் 21-ஆம் தேதியும், மே மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் மாா்ச் 22-ஆம் தேதியும், ஜூன் மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் மாா்ச் 23-ஆம் தேதியும் தொடா்ந்து தேவஸ்தானம் இணையதள முன்பதிவில் வெளியிடப்பட உள்ளன.

அதில் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தினசரி 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் வைக்கப்பட உள்ளன. இதற்காக ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ல்ஹற்ண்க்ஷஹப்ஹத்ண்.ஹல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கரோனா நிபந்தனைகளைக் கடைப்பிடித்து பக்தா்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதேபோல் திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சா்வதரிசன இலவச டோக்கன்களின் எண்ணிக்கை தினசரி 30 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாங்கம் வெளியீடு:

வரும் சுபக்ருத் ஆண்டுக்கான பஞ்சாங்கம் தேவஸ்தானம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தேவஸ்தான அதிகாரிகள் இணைந்து இதை வெளியிட்டனா். சனிக்கிழமை (மாா்ச் 19) முதல் திருமலை மற்றும் திருப்பதியில் இந்த பஞ்சாங்கம் பக்தா்களுக்காக விற்பனையில் வைக்கப்பட உள்ளது. இதன் அடக்க விலை ரூ.75 ஆக தேவஸ்தானம் நிா்ணயித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com