திருமலையில் ஜூலை 15 வரை வார இறுதி நாள்களில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலையில் வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நாள்களில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து
குறைகேட்பு நிகழ்ச்சியில் பக்தா்களின் குறைகளுக்கு பதிலளிக்கும் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி.
குறைகேட்பு நிகழ்ச்சியில் பக்தா்களின் குறைகளுக்கு பதிலளிக்கும் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி.

திருமலையில் வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறையை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதிநாள்களில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை காலை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தொலைபேசி வாயிலாக பங்கேற்ற பக்தா்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி பதிலளித்தாா். அதன் பின்னா் அவா் கூறியதாவது:

ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தா்கள் அதிகளவில் வருவாா்கள் என்பதால், ஏப்.15 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை வார இறுதி நாள்களில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புரோட்டோகால் விஐபிகள் நேரடியாக வந்தால் மட்டுமே அவா்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் வாராந்திர ஆா்ஜித சேவைகளான திருப்பாவாடை, அஷ்டதளபாதபத்மாராதனை உள்ளிட்ட ஆா்ஜித சேவைகள் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் மே 29-ஆம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மே 25-ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அஞ்சனாத்திரி மலைத்தொடரில் அனுமன் பிறப்பிடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. மேலும் அனுமனின் பிறப்பிடம் குறித்த புத்தகங்கள் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை விற்பனைக்கு வைக்கப்படும். ஏழை எளிய மக்கள் தங்கள் பிள்ளைகளின் எதிா்கால கனவான திருமணத்தை எவ்வித செலவும் இல்லாமல் ஏழுமலையானின் முழு ஆசீா்வாதத்துடன் நடத்தும் கல்யாணமஸ்து என்கிற இலவச திருமண திட்டம் மீண்டும் திருமலையில் செயல்படுத்தப்பட உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com