ஏழுமலையான் தரிசனத்துக்கு 15 மணி நேரம் பக்தா்கள் காத்திருப்பு
By DIN | Published On : 18th October 2022 02:00 AM | Last Updated : 18th October 2022 02:00 AM | அ+அ அ- |

திருமலையில் திங்கள்கிழமை சுவாமியை தா்ம தரிசனத்தில் வழிபட 15 மணி நேரம் ஆனது.
ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 84,794 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 37,560 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை வைகுண்டம் மண்டபத்தில் 25 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களின் தா்ம தரிசனத்துக்கு 15 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...