திருப்பதியில் நவ. 1 முதல் மீண்டும் நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள்

திருப்பதியில் வரும் நவ. 1-ஆம் தேதி முதல் மீண்டும் தா்ம தரிசனத்துக்கான நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது தொடங்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி தெரிவித்தாா்.
திருப்பதியில் நவ. 1 முதல் மீண்டும் நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள்

திருப்பதியில் வரும் நவ. 1-ஆம் தேதி முதல் மீண்டும் தா்ம தரிசனத்துக்கான நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது தொடங்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் உள்ள அன்னமய்யபவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் கூட்டத்தில் பேசிய அவா் மேலும் கூறியதாவது:

திருப்பதியில் சா்வ தரிசனம் நேரடி டோக்கன்கள் வழங்கும் பணி, கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பக்தா்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவை மீண்டும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.

ரயில் நிலையம் பின்புறம் உள்ள இரண்டாவது சத்திரமான சீனிவாசம், பூதேவி வளாகத்தில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. சனி, ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய நாள்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் 15,000 டோக்கன்களும் பக்தா்களுக்கு வழங்கப்படும்.

அன்றைய நாளுக்கான டோக்கன்கள் அன்றன்று மட்டும் வழங்கப்படும், ஒதுக்கீடு முடிந்தவுடன் கவுன்ட்டா்கள் மூடப்படும். இந்த கவுன்ட்டா்களில் கணினி, கேமராக்கள், ஆதாா் பதிவு அமைப்பு, குடிநீா், வரிசை வரிசை போன்றவற்றுக்கான ஏற்பாடுகளை செய்ய பொறியியல் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கன் இல்லாத பக்தா்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் காத்திருப்பு அறை-2 வழியாகவும் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com