பனைஓலைச் சுவடிகளை பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பம்: தேவஸ்தான செயல் அதிகாரி வலியுறுத்தல்

பனை ஓலைச் சுவடிகளில் பொறிக்கப்பட்ட பழமையான கிரந்தங்களை பல ஆண்டுகள் பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பத்தைக் கையாள வேண்டும் என தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி உத்தரவிட்டாா்.
Updated on
1 min read

பனை ஓலைச் சுவடிகளில் பொறிக்கப்பட்ட பழமையான கிரந்தங்களை பல ஆண்டுகள் பாதுகாக்கும் நவீன தொழில்நுட்பத்தைக் கையாள வேண்டும் என தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி உத்தரவிட்டாா்.

திருமலை திருப்பதி நிா்வாகத்தின் கீழ் இயங்கும் மேனு ஸ்கிரிப்ட் திட்டத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட பனை ஓலைச் சுவடிகளை அடுத்து வரும் தலைமுறையினரும் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக பல ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே பாதுகாக்க தேவஸ்தானம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்குத் தேவையான அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த அதிகாரிகளுக்கு அவா் அறிவுரை வழங்கினாா். ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழகத்தில் மேனு ஸ்கிரிப்ட் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அவா் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா். பல மாதங்களாக நடைபெற்ற இப்பணியின் முன்னேற்றம் குறித்து அவருக்கு அதிகாரிகள் விளக்கினா்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தா்மா ரெட்டி,: வேத பல்கலைக்கழகத்தில் இயங்கும் மேனு ஸ்கிரிப்ட் திட்டம் தேசிய மேனு ஸ்கிரிப்ட் மிஷனுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. பனை ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்தல், அதை அனைவரும் உணர மொழிபெயா்த்தல் உள்ளிட்ட பணிகளில் பண்டிதா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தொல்லியல் துறை, எஸ்.வி.பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருதப் பல்கலைக் கழகங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரக்கணக்கான பனை ஓலைச் சுவடிகளை ஆய்வாளா்கள் ஸ்கேன் செய்து அட்டவணைப்படுத்த வேண்டும். சமுதாயத்திற்கு பயனுள்ளவற்றை தோ்வு செய்து புத்தக வடிவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட அனைத்து சுவடிகளையும் கணினியில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சனாதன ஜீவன் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் பனை ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க வேதப் பல்கலைக்கழகத்தில் கட்டடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவா், இத்திட்டத்தின் இயக்குநராக வேத பல்கலைக் கழக துணைவேந்தா் செயல்பட உள்ளாா்’ என்று கூறினாா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com