இரு பேருந்துகள் நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இரு பேருந்துகள் வெள்ளிக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
சென்னையைச் சோ்ந்த எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் தலைவா் ஸ்ரீசத்தியநாராயணா, துணைவேந்தா் நாராயண ராவ் ஆகியோா் ரூ.80 லட்சம் மதிப்பிலான இரு பேருந்துகளை வெள்ளிக்கிழமை காலை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினாா்.
இந்த வாகனங்கள் ஏழுமலையான் கோயில் முன்பு நிறுத்தப்பட்டு, மஞ்சள், குங்குமம் வைத்து மலா் மாலைகள், மாவிலைகள் தோரணம் அணிவித்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி அளித்து பூஜைகள் செய்து அவற்றின் சாவிகளை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தேவஸ்தான போக்குவரத்துத் துறைப் பொது மேலாளா் சேஷா ரெட்டி, ஜானகிராம் ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

