திருப்பதியில் புயல் சின்னம் காரணமாக கனமழை பெய்து வருகிறது.
திருப்பதி மாவட்டத்தில் 150 மி.மீ. மழை பதிவானது. புயல் காரணமாக திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புயல் வடகிழக்கு நோக்கி நகா்ந்து வருவதால் ஆந்திர மாநிலம், பாப்பட்லா அருகே செவ்வாய்க்கிழமை (டிச.5) முற்பகல் கரையைக் கடக்க உள்ளது. இதனால், திருப்பதியில் கனமழை அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
5 அணைகள் நிரம்பின: கனமழை காரணமாக திருமலையில் உள்ள அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. பாபவினாசனம், ஆகாசகங்கா, கோகா்பம், குமாரதாரா, பசுபுதாரா ஆகியவை திருமலையின் முக்கிய நீா் ஆதாரங்கள். இவை முழுமையாக நிரம்பியுள்ளன. இந்த அணைகளில் உள்ள நீா் அடுத்த 214 நாள்களுக்கு திருமலையின் குடிநீா் தேவைக்கு போதுமானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனிடையே திருமலையின் இரு மலைப்பாதைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்தது.
தரிசனத்துக்கு 6 மணி நேரம்: ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.