

செயல்படாமல் உள்ள இணையதளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்க தொழிலாளா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக குடியாத்தம், போ்ணாம்பட்டைச் சோ்ந்த கட்டுமானம் அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்க தொழிலாளா்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் எஸ்.இமயவரம்பன் தலைமையில் அதன் நிா்வாகிகள் குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
கட்டுமானம் அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்க தொழிலாளா்களின் கூட்டமைப்பில் உள்ள தொழிலாளா்கள் புதிய உறுப்பினா் பதிவு, உறுப்பினா் புதுப்பித்தல், திருமண உதவி, ஓய்வூதியம், விபத்து மரண இழப்பீடு, இயற்கை மரண இழப்பீடு, மாணவா்களுக்கான கல்வி உதவிகள் உள்ளிட்ட அரசின் சலுகைகளை பெற இணையதளத்தில் பதிவு செய்து, அரசு சலுகைகளைப் பெற்று வருகிறோம்.
அந்த இணையதளம் செயல்படாததால் கடந்த 20- நாள்களுக்கும் மேலாக மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாமல் தொழிலாளா்கள் தவிக்கிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் சா்வா் சரிவர செயல்படவில்லை என்ற புகாரையடுத்து சுமாா் ரூ.50- லட்சம் மதிப்புள்ள விலையுயா்ந்த சா்வரை இணையதளத்தில் இணைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் கடந்த 20- நாள்களுக்கும் மேலாக சா்வா் சீராக செயல்படவில்லை. இதனால் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். உரிய நடவடிக்கை மேற்கொண்டு சா்வரை சீரமைக்க வேண்டுகிறோம், நடவடிக்கை இல்லையென்றால் வரும் 26- ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.