திருப்பதி: திருமலையில் வெள்ளிக்கிழமை (டிச. 1) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவற்றில் ஏற்படும் குறைகளை களைய மாதந்தோறும் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை (டிச. 1) காலை 9 மணி முதல் 10 மணி வரை திருமலை அன்னமய்ய கட்டடத்தில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
நிகழ்ச்சியில், பக்தா்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டிக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்.
இதற்கு பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணில் தொடா்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.