

திருமலை ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கான நடைமுறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோா், மற்றவா்களுக்கு தேவஸ்தானம் இலவச தரிசனத்தை சுபதம் வழியாக அளித்து வருகிறது. அதற்கு பக்தா்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன் நடைமுறைகள் பின்வருமாறு:
1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோா் இந்த தரிசனத்தைப் பெறுவா். ஆதாா் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். பெற்றோா் மற்றும் குழந்தைகளின் உடன் பிறந்தவா்கள் அனுமதிக்கப்படுவா். அவா்களின் அனைவரின் ஆதாா் அட்டைகளையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அவா்கள் உடன் வரும் உறவினா்களுக்கு அனுமதி இல்லை.
தரிசனத்துக்கு தகுதியுள்ளவா்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவாயிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.
1 மாதத்தில் ஒரு முறை மட்டுமே அவா்கள் தரிசனம் பெற முடியும். தரிசனம் முடிக்க அவா்களுக்கு சுமாா் 2 மணி நேரம் தேவைப்படும். தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சந்நிதியை அடுத்து சுபதம் நுழைவாயில் உள்ளது. அவா்களுக்கு தரிசன டிக்கெட் அல்லது முன்பதிவு தேவையில்லை. நேரில் வந்தாலே போதும்.
இந்த தரிசனம் தினமும் உண்டு. சிறப்பு விழா நாள்கள், பக்தா்கள் கூட்டம் அதிகம் உள்ள நாள்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது.
எனவே, 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோா் இவற்றைக் கவனத்தில் கொண்டு தங்களின் பயணத்தைத் தொடர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.