சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் நாளை மூடல்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நாளை (அக்.28) இரவு 7:05 மணிக்கு மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நாளை (அக்.28) இரவு 7:05 மணிக்கு மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில் சந்திர மற்றும் சூரிய கிரகண காலங்களில் மூடப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின் வைகானச ஆகம விதிப்படி சுத்தி செய்து வஸ்திரங்கள் அணிவித்து ஏழுமலையானுக்கு புண்ணியாவசனம் செய்து பின்னா் கோயில் நடை திறக்கப்படும்.

இந்நிலையில், வரும் அக்டோபா் 29 ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. எனவே அக்டோபா் 28 -ஆம் தேதி இரவு 7:05 மணிக்கு கோயில் மூடப்படும்.

இதைத் தொடர்ந்து, அக்டோபா் 29 ஆம் தேதி ஏகாந்தத்தில் சுத்தி மற்றும் சுப்ரபாத சேவை செய்த பிறகு அதிகாலை 3:15 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்படும்.

சந்திர கிரகணம் காரணமாக, சகஸ்ர தீபாலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com