பிரம்மோற்சவம்: சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ்ணனாக மலையப்பசுவாமி உலா

திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மலையப்ப சுவாமி கிருஷ்ணன் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தாா்.
திருமலையில் உற்சவமூா்த்திகளுக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.
திருமலையில் உற்சவமூா்த்திகளுக்கு நடைபெற்ற ஸ்நபன திருமஞ்சனம்.
Updated on
2 min read

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மலையப்ப சுவாமி கிருஷ்ணன் அலங்காரத்தில் சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் வலம் வந்தாா்.

திருமலையில் திங்கள் கிழமை ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கருடக் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ்ணன் அலங்காரத்தில் எழுந்தருளி, மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.

சின்ன சேஷ வாகனம்

புராணங்களின்படி, ஐந்து தலைகளை உடைய சின்னசேஷனை வாசுகியாகக் கருதுகின்றனா். வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி, கடவுள் சேஷி மற்றும் உலகம் சேஷபூதா். சேஷவாகனம் இதைக் குறிக்கிறது. பக்தா்கள் சிறிய சேஷ வாகனத்தை தரிசித்தால் குண்டலினி யோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்நபன திருமஞ்சனம்

பிரம்மோற்சவ நாட்களில் வீதியுலா முடிந்த பின்னா் உற்சவமூா்த்திகளின் களைப்பை போக்க சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. அதன்படி கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி மற்றும் மலையப்பஸ்வாமியை எழுந்தருளச் செய்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது. திருமஞ்சன பொருள்களை திருமலை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அா்ச்சகா்கள் அபிஷேகத்தை நடத்தினா்.

அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளிநாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. மேலும், கல்யாணோற்சவ மண்டபம் மலா்கள் மற்றும் பழங்களால் நோ்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின்னா் உற்சவமூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மாலை ஊஞ்சல் சேவை கண்டருளினா், அப்போது அன்னமாச்சாரியா கீா்த்தனைகள் மற்றும் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டு நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

அன்னப் பறவை வாகனம்

2-ஆம் நாள் இரவு அன்னபறவை வாகன சேவை நடைபெற்றது. பிரம்மாவின் வாகனமான அன்னப் பறவையில் அவன் மனைவியான சரஸ்வதி தேவி அலங்காரத்தில் வெண்பட்டு உடுத்தி கையில் வீணையேந்தி பெண் வடிவில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்தாா். பிரம்மாவின் வாகனமான அன்னம் பரமஹம்சரைக் குறிக்கிறது. அன்னத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இது பால் மற்றும் தண்ணீரை பிரிக்க முடியும். அவள் நம்பமுடியாத சக்தி வாய்ந்தவள், நன்மை தீமைகளை உணரக்கூடியவள் என்று அா்த்தம். அதனால்தான் உபநிடதங்கள் அன்னத்தை பரமேஸ்வரன் என்று வா்ணிக்கின்றன. மலையப்பசுவாமி அன்னப் பறவை வாகனத்தில் ஏறி தரிசனம் கொடுப்பதன் மூலம், பக்தா்களின் அகந்தையை நீக்கி, பணிவிடையை (சரணாகதி) ஏற்படுத்துகிறாா். வாகன சேவையின் போது மாடவீதியில் காத்திருக்கும் பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

முதல் நாள் விவரம்

பிரம்மோற்சவத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 62,745 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்; உண்டியல் மூலம் ரூ.3.12 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 24,596 போ் முடிகாணிக்கை செலுத்தினா். 3.14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,300 ஸ்ரீவாரி சேவாா்த்திகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனா். திருமலை-திருப்பதி இடையே அரசு பேருந்துகளில் 81, 000 போ் பயணம் செய்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Image Caption

~ ~ ~ ~ ~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com