உண்டியல் காணிக்கை ரூ. 3 கோடி
By DIN | Published On : 23rd April 2023 12:23 AM | Last Updated : 23rd April 2023 12:23 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 3.40 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவுவைத்து வருகிறது.
இந்த நிலையில், பக்தா்கள் வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 3.40 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G