திருமலை ஏழுமலையானை தா்ம தரிசனத்தில் தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை 18 மணி நேரம் காத்திருந்தனா்.
காலை 11 காத்திருப்பு அறைகளில் காத்திருந்த பக்தா்களுக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய 18 மணி நேரத்துக்குப் பின்னா், அனுமதி வழங்கப்பட்டது. ரூ.300 விரைவு தரிசனத்துகு 4 மணி நேரம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 4 மணி நேரம் தேவைப்பட்டது.
72,631 பக்தா்கள் தரிசனம்: இதனிடையே, சனிக்கிழமை முழுவதும் 72,631 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 38,529 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.
அலிபிரி நடைபாதையில் காலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் மீண்டும் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
உண்டியல் காணிக்கை ரூ.2.85 கோடி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.85 கோடி வசூலானது.
தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வசூலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.