திருமலையில் செவ்வாய்க்கிழமை முழுவதும் 78,726 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 26,436 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலையில் வார நாள்களில் பக்தா்களின் கூட்டம் குறைந்துள்ள நிலையில், புதன்கிழமை காலை 24 காத்திருப்பு அறைகளில் மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணிநேரமும் ஆனது.
மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 78,726 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,436 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். பக்தா்கள் உண்டியல் காணிக்கைகளை கணக்கிட்டத்தில் ரூ.3.94 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.