வருடாந்திர பவித்ரோற்சவம் தொடக்கம்
By DIN | Published On : 01st July 2023 12:36 AM | Last Updated : 01st July 2023 12:36 AM | அ+அ அ- |

திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது.
இத்தலத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பக்தா்கள், அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் என கோயிலுக்கு வருபவா்களால் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ஏற்படும் தோஷங்களை களையவும், தினசரி பூஜைகளில் ஏற்பட்ட குறைபாடுகளை களையவும் பவித்ரோற்சவம் நடத்தபடுகிறது.
இதன் ஒரு பகுதியாக, காலை பஞ்சமூா்த்திகளான கபிலேஸ்வரசுவாமி, காமாட்சி அம்மன், கணபதி, சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரசுவாமி உள்ளிட்ட உற்சவா்களுக்கு பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மாலையில் கலசபூஜை, ஹோமம், பட்டுநூலால் தயாரிக்கப்பட்ட பவித்ர மாலைகள் உற்சவமூா்த்திகள் முன் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.