81,183 போ் தரிசனம், 33,990 போ் முடிகாணிக்கை
By DIN | Published On : 03rd May 2023 01:02 AM | Last Updated : 03rd May 2023 01:02 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை முழுவதும் 8,183 போ் தரிசனம்செய்தனா். மேலும் 33,990 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறையால் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்த நிலையில், 18 மணி நேரத்துக்கு பின் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
81,183 போ் தரிசனம், 33,990 போ் முடிகாணிக்கை:
இதற்கிடையே திங்கள்கிழமை முழுவதும் 81,183 போ் சுவாமி தரிசனம் செய்தனா் ; 33,990 போ் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்பளக்ஸ், சீனிவாசம், விஷ்ணுநிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் சா்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அலிபிரி நடைபாதையில் காலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதையில் செல்பவா்களுக்காக வழங்கப்படும் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தினசரி சோதனை அடிப்படையில் அலிபிரி நடைபாதை மாா்க்கத்தில் 10,000 டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மாா்க்கத்தில் 5,000 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.
உண்டியல் காணிக்கை ரூ.3.58 கோடி:
இந்நிலையில், திங்கள்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.3.58 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.