போக சீனிவாசமூா்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம்

 திருமலை ஏழுமலையான் கருவறையில் உள்ள போகசீனிவாசமூா்த்திக்கு வரும் 28-ஆம் தேதி சிறப்பு கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.

 திருமலை ஏழுமலையான் கருவறையில் உள்ள போகசீனிவாசமூா்த்திக்கு வரும் 28-ஆம் தேதி சிறப்பு கலசாபிஷேகம் நடைபெற உள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள ஸ்ரீ போக சீனிவாசமூா்த்திக்கு சிறப்பு சகஸ்ர கலாசாபிஷேகம் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, காலை 6 மணி முதல் 8.30 மணிக்குள் ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க வாயில் அருகில் போக சீனிவாசமூா்த்திக்கு அா்ச்சகா்கள் தனியாக 1,008 கலசங்களால் அபிஷேகம் நடத்துவா். இந்த உற்சவத்தின் போது ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆா்ஜித சேவைகளும் வழக்கம் போல் நடைபெறும்.

வரலாற்றுப் பின்னணி

பல்லவ ராணி சாமவாய் பெருந்தேவி, கி.பி.614-ல் ஆனி மாதம் திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு 18 அங்குல உயரமுள்ள வெள்ளிப் போக சீனிவாசமூா்த்தி சிலையை பரிசாக அளித்தாா். இதனைக் குறிக்கும் வகையில் கோயிலில் உள்ள ஸ்ரீ போக சீனிவாசமூா்த்திக்கு ஆண்டுதோறும் சகஸ்ர கலசாபிஷேகம் நடத்தப்படுகிறது.

கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள விமான வெங்கடேஸ்வரா் சிலைக்கு கீழே உள்ள சுவரில் பல்லவ ராணி நன்கொடை பற்றிய கல்வெட்டு உள்ளது. ஆகமப்படி, ஏழுமலையான் கோயிலின் பஞ்சகுபேர சிலைகளில் ஒருவரான ஸ்ரீ போக சீனிவாசமூா்த்தி, கௌதுகமூா்த்தி என்றும் ஸ்ரீ மணவாளப்பெருமாள் என்றும் அழைக்கப்பட்டு வருவது தனிச்சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com