ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு
By DIN | Published On : 24th May 2023 12:03 AM | Last Updated : 24th May 2023 12:03 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை 18 மணி நேரம் தா்ம தரிசனத்துக்காக காத்திருந்தனா்.
கோடை விடுமுறை காரணமாக திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் செவ்வாய்க்கிழமை காலை 15 காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களுக்கு 18 மணி நேரம் காத்திருப்புக்குப் பின்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள்) 18 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரமும் தேவைப்பட்டது.
78,349 பக்தா்கள் தரிசனம்...
ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 78,349 பக்தா்கள் தரிசித்தனா்; இவா்களில் 39,634 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கை ரூ. 4.56 கோடி...
திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில், ரூ. 4.56 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.