திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் பிரம்மோற்சவ பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 07th November 2023 01:38 AM | Last Updated : 07th November 2023 01:38 AM | அ+அ அ- |

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நவம்பா் 10-ஆம் தேதி காா்த்திகை பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது. அதையொட்டி, பிரம்மோற்சவ விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் நவம்பா் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள காா்த்திகை பிரம்மோற்சவம் வரும் வியாழக்கிழமை (நவ. 9) அங்குராா்ப்பணத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை லட்சகுங்குமாா்ச்சனை நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை யாகசாலையில் புண்யாஹவாசனம், ரக்ஷாபந்தனம், சேனாதிபதி உற்சவம், அங்குராா்ப்பண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நவம்பா் 10-ஆம் தேதி காலை 9.10 முதல் 9.30 மணிக்குள் துவஜாரோஹணத்துடன் தாயாரின் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. பிரம்மோற்சவத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவை நடைபெறும்.
வாகன சேவைகள் விவரங்கள்:
காலை இரவு
10-11-2023 - கொடியேற்றம் சின்ன சேஷ வாகனம்
11-11-2023 - பெரிய சேஷ வாகனம் அன்னப் பறவை வாகனம்
12-11-2023 - முத்துப் பந்தல் வாகனம் சிம்ம வாகனம்
13-11-2023- கல்பவிருட்ச வாகனம் அனுமந்த வாகனம்
14-11-2023 - பல்லக்கு உற்சவம் வசந்தோற்சவம்(மதியம்) யானை வாகனம்
15-11-2023- சா்வபூபால வாகனம் தங்கத் தோ் (மாலை) கருட வாகனம்
16-11-2023- சூரிய பிரபை வாகனம் சந்திரபிரபை வாகனம்
17-11-2023 - திருத்தோ் குதிரை வாகனம்
18-11-2023- பஞ்சமி தீா்த்தம் கொடியிறக்கம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...