

ஆந்திர மாநிலஆளுநா் அப்துல் நசீா் திருமலையில் தனது குடும்பத்துடன் வழிபாடு நடத்தினாா்.
ஞாயிற்றுக்கிழமை காலை திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மகா துவாரம் வந்தடைந்த அவரை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி, உள்ளிட்டோா் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனா்.
பின்னா் அா்ச்சகா்கள் பாரம்பரிய இஸ்திகாபால் அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்றனா். கோயிலுக்குள் சென்று ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய ஆளுநருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் சேஷ வஸ்திரம் அணிவித்து, தீா்த்தப்பிரசாதங்கள், புகைப்படம், 2024 காலண்டா்கள் மற்றும் தேவஸ்தான டைரிகள் வழங்கப்பட்டன. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.