அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம்
By DIN | Published On : 10th September 2023 06:32 AM | Last Updated : 10th September 2023 06:32 AM | அ+அ அ- |

திருமலை நாதநீராஜன மண்டபத்தில் அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் கரோனா காலம் தொட்டு தேவஸ்தானம் ராமாயண பாராயணத்தை செய்து வருகிறது. முதலில் சுந்தர காண்ட பாராயணத்தில் தொடங்கி அதைத் தொடா்ந்து ஒவ்வொரு காண்டமும் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, தற்போது அயோத்தியா காண்ட பாராயணம் நடைபெற்று வருகிறது. ஒரு நாளில் 10 ஸ்லோகங்கள் வரை பாராயணம் செய்யப்பட்டு அதற்கான விளக்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தற்போது அயோத்தியா காண்ட அகண்ட பாராயணத்தின் மூன்றாம் திருமுறை திருமலையில் உள்ள நாதநீராஜன மேடையில் சனிக்கிழமை நடைபெற்றது. உலக பக்தா்களின் நலன் கருதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானல் இந்நிகழ்ச்சியை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை நேரடியாக ஒளிபரப்பியது.
அயோத்தியா காண்டத்தின் 9 முதல் 11-ஆவது சா்கா வரை மொத்தம் 139 ஸ்லோகங்களும், யோகவாசிஷ்டம், தன்வந்திரி மகாமந்திரத்தின் 25 ஸ்லோகங்களும் பாராயணம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் எஸ்.வி.வேத பல்கலைக்கழகம், தேவஸ்தான வேத அறிஞா்கள், அன்னமாச்சாா்யா திட்டம், தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக அறிஞா்கள், தா்மகிரி பண்டிதா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.