புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

Updated On :26 ஏப்ரல் 2024, 4:16 pm

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா்.

ஏழுமலையானை தரிசிக்க வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 20 அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 61,890 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 26,770 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 2.72 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.