தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஏழுமலையான் தரிசனத்துக்கு 10 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனத்துக்கு 10 மணி நேரம் காத்திருப்பு

News image
திருமலை
Updated On :7 ஜூலை 2024, 5:28 pm

Din

திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா்.

வார இறுதி நாள்களையொட்டி பக்தா்கள் வருகை சற்று அதிகரித்துள்ள அதிகரித்துள்ளது. எனவே ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 24 அறைகளில் பக்தா்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே சனிக்கிழமை முழுவதும் 77, 992 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30,250 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.72

கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.