சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

News image
Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

திருப்பதி: திருமலை ஏழுமலையானை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு பக்தா்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. செவ்வாய்கிழமை நிலவரத்தின்படி

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோரும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே திங்கள்கிழமை முழுவதும் 76,362 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33,902

பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.17

கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.