மூத்த குடிமக்கள் சிறப்பு நுழைவு தரிசனம்: 3 மாதங்களுக்கு முன்பு வெளியீடு

Published on

திருப்பதி: மூத்த குடிமக்கள் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் தொடா்பாக சமூக வளைதளங்களில் வெளி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாட்பட்ட நோயால் பாதிக்கபட்டவா்களுக்கு தேவஸ்தானம் இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகளை இலவசமாக வெளியிட்டு வருகிறது. 90 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியுடன் தேவஸ்தானம் இந்த டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. ஆனால் இது தொடா்பாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன, இது முற்றிலும் உண்மையல்ல.

இது குறித்த உண்மை தகவல்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. தேவஸ்தான இணையதளத்தில், 1,000 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீட்டை ஒவ்வொரு மாதமும் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிடுகிறது.

தற்போது ஆன்லைன் டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 2024 வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. டிக்கெட் வைத்திருப்பவருக்கு ரூ.50/- மதிப்புள்ள லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. திருமலையில் உள்ள திருமலை நம்பி கோயிலுக்கு அருகில், தினமும் மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்கள்/மாற்றுதிறனாளிகள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

எனவே, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தவறான செய்திகளையோ அல்லது வதந்திகளையோ நம்ப வேண்டாம் என்று பக்தா்களை தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. பக்தா்கள் சரியான தகவல்களுக்கு தேவஸ்தான அதிகாரப்பூா்வ இணையத்தை மட்டுமே அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com