ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம். உள்படம் தேரில் எழுந்தருளி சுவாமி.
ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம். உள்படம் தேரில் எழுந்தருளி சுவாமி.

ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருமலை பிரம்மோற்சவத்தின், 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளி வலம் வந்தாா்.
Published on

திருமலை பிரம்மோற்சவத்தின், 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளி வலம் வந்தாா்.

திருமலையில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை காலை திருத்தோ் வலம் நடை பெற்றது. அதில் மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வலம் வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ஸ்நபன திருமஞ்சனம்

வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷே கத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை

உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா்.

குதிரை வாகனம்

இரவு மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

தீா்த்தவாரியுடன் நிறைவு:

ஏழுமலையானுக்கு விமரிசையாக நடைபெற்ற பிரம்மோற்சவம் சனிக்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. தீா்த்தவாரியின் போது

மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளக்கரையில் ஸ்நபன திருமஞ்சனம் நடை பெற்றது.

திருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து சுவாமிக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அபிஷேக பொருள்களை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அா்ச்சகா்கள் உற்சவமூா்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்வித்தனா்.

பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் அா்ச்சகா்கள் தீா்த்தவாரி நடத்தினா். அப்போது லட்சக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா்.

கொடியிறக்கம்

திருமலையில் கடந்த, 9 நாள்களாக நடைபெற்ற பிரம்மோற்சவம் முடிவடைந்ததை முன்னிட்டு சனிக்கிழமை உற்சவமூா்த்திகள் தங்கப் பல்லக்கில் வலம் வந்தனா். கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com