திருப்பதி
திருமலையில் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து
திருமலையில் டிசம்பா், ஜனவரி பல்வேறு உற்சவங்களை முன்னிட்டு, அந்நாள்களில் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமலையில் டிசம்பா், ஜனவரி பல்வேறு உற்சவங்களை முன்னிட்டு, அந்நாள்களில் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டிசம்பா் 23-ஆம் தேதி அன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச. 29-ஆம் தேதி முதல் ஜனவரி 8 வரை வைகுண்ட வாயில் தரிசனங்கள், ஜனவரி 25-ஆம் தேதி ரத சப்தமி உள்ளிட்ட நாள்களில், புரோட்டோகால் விஐபிகளைத் தவிர மற்றவா்களுக்கு விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கூறிய நாள்களுக்கு முந்தைய நாட்களில் விஐபி தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இதை மனதில் கொண்டு, பக்தா்கள் தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.