ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.
Published on

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 61,582 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 19,757 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.35 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com