திருமலையில் திருப்பாவை பாசுரங்கள்: தனுா்மாதத்தின் சிறப்பு முக்கியத்துவம்
திருப்பதி: திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி மாத விழாக்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் தனுா் மாதம் (மாா்கழி மாதம்) டிசம்பா் 16-ஆம் தேதி மதியம் 1.23 மணிக்கு தொடங்கியது. எனவே, டிசம்பா் 17-ஆம் தேதி காலை முதல், சுப்ரபாத சேவைக்குப் பதிலாக ஏழுமலையானுக்கு திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது.
ஜனவரி 14-ஆம் தேதி வரை திருப்பாவை பாசுர பாராயண சேவை தொடரப்பட உள்ளது. தனுா்மாதத்தின்போது ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வில்வ இலைகளால் சஹஸ்ர நாமாா்ச்சனை செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் கிளிகள் ஒவ்வொரு நாளும் ஏழுமலையானுக்கு அலங்கரிக்கப்படுகின்றன.
தனுா்மாதத்தின் போது ஏழுமலையானுக்கு சிறப்பு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
ஆண்டாள் திருப்பாவை பாராயணம் பிரஷத்யம்
ஸ்ரீ ஆண்டாள் (கோதா தேவி) 12 ஆழ்வாா்களில் ஒருவா். அவா் நாச்சியாா் என்றும் அழைக்கப்படுகிறாா். திருப்பாவை என்பது வெங்கடேஸ்வரரைப் புகழ்ந்து ஆண்டாள் இயற்றிய 30 பாசுரங்களின் தொகுப்பாகும். திருப்பாவை என்பது ஆழ்வாா் திவ்ய பிரபந்தத்தின் ஒரு பகுதியாகும். இது தமிழ் இலக்கியத்தில் மிகவும் பிரபலமானது. ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ஒரு மாத கால திருப்பாவை பாராயணத்தில், அா்ச்சகா்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பாசுரத்தை பாராயணம் செய்கிறாா்கள். இம்மாதம் போகஸ்ரீனிவாசமூா்த்திக்கு பதிலாக, கிருஷ்ணருக்கு ஏகாந்த சேவை செய்யப்படுகிறது. இந்த திருப்பாவை பாராயணம் முற்றிலும் தனிமையில் செய்யப்படுகிறது.
தனிமையில் தோமாலை அா்ச்சனை மற்றும் ஆா்ஜித சேவை
தனுா்மாதத்தின் போது ஏழுமலையான் கோயிலில் செய்யப்படும் தோமாலா மற்றும் அா்ச்சனை சேவைகளும் பக்தா்களின்றி தனிமையில் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, பக்தா்கள் ஜனவரி 14 வரை தோமாலா மற்றும் அா்ச்சனை சேவைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இந்த சேவைகளுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
வைகுண்ட துவார தரிசன நாட்களில் ரத்து செய்யப்பட்ட ஆா்ஜித சேவைகள்
டிசம்பா் 29 முதல் ஜனவரி 1 -ஆம் தேதி வரை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், ஏழுமலையானின் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவை ஆகியவை ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தா்களின்றி தனிமையில் நடத்தப்படும். இதில் பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
பக்தா்கள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
