28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் டிச.30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு கோயிலை சுத்தம் செய்த அதிகாரிகள்.
Updated On :23 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயிலில் டிச.30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடு, செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: உகாதி (தெலுகு வருடப் பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட சிறப்பு நாள்களை முன்னிட்டு அதற்கு முன்வரும் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

இதையொட்டி, ஆனந்த நிலையம் தொடங்கி தங்க வாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகங்கள், மடப்பள்ளி, சுவா்கள், மேற்கூரை, பூஜைப் பொருள்கள், பலிபீடம், கொடி மரம், முன் வாயில் உள்ளிட்டவை புனித நீரால் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

இதற்கு முன் ஏழுமலையான் சிலையை முழுவதுமாக துணியால் மூடி, சுத்திகரிப்புக்குப் பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு, பூங்கற்பூரம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய கலவையால் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

அதையடுத்து, சுவாமியின் மூலவா் சிலையை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, ஆகம முறைப்படி சிறப்பு பூஜை செய்து நெய்வேத்தியம் சமா்ப்பித்தனா். பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா். பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா், என்று தெரிவித்தனா்.

கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பானு பிரகாஷ் ரெட்டி, சாம்பசிவ ராவ், ராஜசேகா் கௌடு, சுசித்ரா யெல்லா, பனபாக லட்சுமி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீதா், மாவட்ட எஸ்.பி சுப்பராயுடு, கோயில் துணை இ.ஓ லோகநாதம் கலந்து கொண்டனா்.