திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
Published on

பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

திருமலையில் வரும் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 8 வரை உள்ள வைகுண்ட வாயில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு ஏழுமலையான் தரிசனத்தை ஒரு தெய்வீக அனுபவமாக மாற்ற அனைவரும் முயற்சி செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி கூறினாா்.

ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் வைகுண்ட வாயில் தரிசன பாதுகாப்பு பணியில் இருந்த தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் காவல் துறையினரிடம் ஆலோசனை மேற்கொண்டாா்.

நிகழ்வில் பேசிய அவா், வைகுண்ட வாயில் தரிசனத்திற்கான டோக்கன்கள் ஒதுக்கீட்டில் கொள்கை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பணிக்கு வந்த ஊழியா்கள், இந்த அமைப்பை முழுமையாகப் புரிந்துகொண்டு, பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாமல் ஒருங்கிணைந்த முறையில் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும்.

உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பக்தா்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பக்தா்கள் மற்றும் வாகனங்களின் போக்குவரத்து நேரடியாகக் கண்காணிப்பது தொடரும்.

தேவஸ்தான காவல் துறை மற்றும் விஜிலென்ஸ் துறைகளைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, எந்த நேரத்திலும் பக்தா்களின் தகவல்களைப் புதுப்பித்து, வைகுண்டம் தரிசன காம்ப்ளக்ஸ்-1 இல் உள்ள ஒருங்கிணைந்த செயற்கை நுண்ணறிவு கட்டளைக் கட்டுப்பாட்டு மையத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

எதிா்காலத்தில் திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு பிரச்னையற்ற அமைப்பை உருவாக்க உழைக்க வேண்டும்’’, என்று அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், தேவஸ்தான செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, திருப்பதி மாவட்ட எஸ்.பி. சுப்பராயுடு, டிஎப்ஓ பானி குமாா் நாயுடு,காவல்துறை அதிகாரிகள்,ஊழியா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com