கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

News image

திருமலை ஏழுமலையான்

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2025, 7:07 pm

Din

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

90,802 பக்தா்கள் தரிசனம்: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 90, 802 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 35, 776 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.